மத்திய பட்ஜெட்-2020: தனிநபருக்கான வருமான வரி குறைப்பு

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார். மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிக்கான விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

  • ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
  • ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளோர் அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை
  • வருமான வரி குறைப்பால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்
  • ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை தனிநபர் வருமானம் உள்ளோருக்கான வரி 20% லிருந்து 10 சதவீதமாக குறைப்பு
  • ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவோருக்கு 15 சதவீதம் வரி விகிதம்
  • ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை தனிநபர் வருமானம் உள்ளோருக்கான வரி 20 சதவீதம்
  • ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தனிநபர் வருமானம் உள்ளோருக்கான வரி 25 சதவீதமாக குறைப்பு
  • ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுவோருக்கு 30 % வரி என்பது நீடிக்கும்

5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. 5 லட்ச ரூபாய் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி, 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்தில் இருந்து 12.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி, 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

12.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி 30 சதவீதமாக நீடிக்கும். தனிநபர் வருமான வரி முறையை எளிதாக்கும் வகையில், 70 வகையான வருமான வரி கழிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 100 வகையான கழிவுகள் இருந்த நிலையில், அதில் 70 வகையான கழிவுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *