மத்திய பட்ஜெட் 2020: ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார்.

 • நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, உருவாக்க ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு
 • ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம்
 • 2000 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
 • 2023-ம் ஆண்டுக்குள் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்
 • பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றப்படும்
 • சென்னை – பெங்களூரு இடையே எக்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்
 • தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிததாக அறிமுகம் செய்யப்படும்
 • 27000 கி.மீ. தொலைவு ரயில் பாதை மின் மயமாக்கப்படும்
 • ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்
 • சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் வகை ரயில்கள் மூலம் இணைக்கப்படும்
 • தனியார் – அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு
 • 2024ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள்
 • போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • மின் பயன்பாட்டை ஒழுங்கு படுத்த டிஜிட்டல் மீட்டர்கள்
 • ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்
 • 4 ரயில் நிலையங்கள் அரசு – தனியார் பங்களிப்புடன் மறு மேம்பாடு செய்யப்படும்
 • தேசிய எரிவாயு தொகுப்பு 27 ஆயிரம் கி.மீ என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும்
 • ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டே இணையதளம் மூலமாக இணைக்க திட்டம்
 • பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிக் பைபர் இணையதள வசதி
 • நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்
 • தேசிய அளவிலான 2 அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
 • 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். – நிர்மலா சீதாராமன்.
 • விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி.
 • ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு
 • நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்
 • கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது
 • சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள் மூடப்படும்
 • குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8, 000 கோடி ஒதுக்கீடு
 • அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
 • தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும்
 • தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு
 • தேசிய ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்த சிறப்பு செயல்பாட்டுக் குழு அமைக்கப்படும்
 • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
 • பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு
 • பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
 • நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கி.மீ. க்கு பொருளாதார பாதை அமைக்கப்படும்
 • தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் சுற்றுலாத்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
 • கலாச்சாரத்துறைக்கு ரூ.3,150 கோடி ஒதுக்கீடு
 • ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 இடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களாக மேம்படுத்தப்படும்
 • சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு
 • சிறந்த நாடு குறித்து திருவள்ளுவர் கூறியதை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *