இந்தியா-பிரான்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் சென்ற நிலையில், இந்தியா-பிரான்ஸ் இடையே தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திரமோடி 3 நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலாசார பாரம்பரியத்தின் சிறந்த நகராக விளங்குகிற சாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் இரு தரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதையடுத்து இரு நாட்டு குழுக்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்தியா-பிரான்ஸ் இடையே திறன்மேம்பாடு, வான்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிபர் மேக்ரான் பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட முடிவு தொடர்பாக பிரதமர் மோடி விளக்கினார். அந்த விவகாரம் இந்தியாவின் இறையாண்மைக்கு உள்பட்டதாகும். காஷ்மீர் விவகாரத்துக்கு இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் இதர நாடுகள் தலையிடக் கூடாது என்றும் பிரதமர் மோடியிடம் கூறினேன் என்றார்.

பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை தடுப்பது, பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும். இரு நாடுகளுமே அவ்வப்போது பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளன.
பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற சவால்களை இந்தியாவும்-பிரான்ஸும் ஒன்றாக எதிர்கொள்கின்றன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *