மத்திய பட்ஜெட்-2020: வங்கி டெபாசிட் காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார்

  • வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
  • வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிப்பு
  • மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ பங்குகள் விற்பனை செய்யப்படும்
  • லடாக் யூனியம் பிரதேசத்தை மேம்படுத்த ரூ.5,958 கோடி ஒதுக்கீடு
  • ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.30,757 கோடி ஒதுக்கீடு
  • மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு ரூ.9,500 கோடி
  • சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு
  • அரசு பத்திரங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்யலாம்
  • எல்.ஐ.சி. நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டம்
  • 2020-2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10% ஆக இருக்கும்
  • அரசின் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் என கணிப்பு
  • பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இந்த ஆண்டில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *