மத்திய பட்ஜெட் 2020- சிறப்பம்சங்கள், அறிவிப்புகள்…

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார்

 • டிஜிட்டல் இந்தியா மூலமாக உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 • பட்ஜெட்டின் 3 நோக்கம்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதுல்
 • கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
 • விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்க தொடர்ந்து மத்திய அரசு பணியாற்றும்
 • வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 • வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்றி செயல்படுத்தப்படும்
 • தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்
 • 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்
 • அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்தும் வகையில் திட்டம்
 • பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச் சூடியை சுட்டிக்காட்டினார் நிர்மலா
 • பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச் சூடியை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்
 • விவசாயிகள் பலன் பெற கிராம அளவில் விவசாய பொருட்கள் சேமிப்பகம் அமைக்க முயற்சி
 • கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி எனும் புதிய திட்டம்
 • விளைபொருட்களை எளிதாக விநியோகிக்க தனியார் பங்களிப்புடன் குளிர்சாதன வசதியுடன் தனி ரயில்
 • விமான போக்குவரத்து துறை மூலமாக கிருஷி உடான் எனும் திட்டம் அமல்படுத்தப்படும்
 • ஒரு மாவட்டம் – ஒரு உற்பத்தி என்கிற அடிப்படையில் தோட்டக்கலைத்துறையில் புதிய முயற்சி
 • கிருஷி உடான் திட்டம் மூலமாக வடகிழக்கு மாநிலங்களின் வேளாண் துறையை மேம்படுத்த முடியும்
 • கிருஷி உடான் திட்டம் மூலமாக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்படும்
 • நபார்டு மூலமான மறு நிதி உதவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
 • 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு
 • 2021-க்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பால் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு
 • 2022-2023-க்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு
 • சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்
 • வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • விவசாயிகளுக்கு கிசான் ரயில்: குளிர்சாதன வசதியுடன் பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் வசதி
 • விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
 • ஆயுஷ்மான் திட்டத்தின் படி அரசு – தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்
 • பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
 • தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு
 • ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு
 • புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்
 • நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பொறியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்படும்
 • 150 பல்கலைக்கழங்களில் புதிய பாடப்பிரிவுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்
 • முன்னணி பல்கலைக்கழங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்
 • மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை
 • மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்
 • ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும்
 • அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை
 • 2020-201 நிதி ஆண்டில் ரூ.99,300 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு
 • பெரிய மருத்துவமனைகளிலும் முதுகலை மருத்துவ கல்வியை வழங்க ஊக்கம் வழங்கப்படும்
 • திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.3000 கோடி ஒதுக்கீடு
 • அரசு – தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக மேம்படுத்தப்படும்
 • இந்தியாவில் செல்போன் உற்பத்தியை ஊக்கப்படுத்த திட்டம் வகுக்கப்படும்
 • தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த முதலீட்டளார்களுக்கு அனுமதி வழங்க பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்படும்
 • தேசிய ஜவுளித் திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு
 • உள்நாட்டில் மின்னணு பொருட்களை ஊக்கப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும்
 • இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஒரு ஏற்றுமதி கேந்திரமாக வேண்டும் என்பது மோடியின் கனவு
 • அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்க திட்டம் இயற்றப்படும்
 • வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *