பட்ஜெட்-2020: உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது-நிர்மலா சீதாராமன்

டெல்லி, பிப்ரவரி-01

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: பட்ஜெட் தாக்கல் செய்யும் போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான ஜி.எஸ்.டி. முறை வரும் ஏப்ரல் முதல் அமல்ப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பலன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டு கால மோடி அரசில் நாடு முழுவதும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிர்வாக சீர்திருத்தங்கள் மூலமாக நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வலுப்பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை. மக்களின் செலவிடும் சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இந்தியாவின் வரி முறையை நாடு முழுவதும் ஒருங்கிணைத்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் தற்போது உருவாகியுள்ளனர். ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது.

40 கோடி வருமான வரிக் கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. ஜிஎஸ்டி மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பண பலன் கிடைத்துள்ளது. நடுத்தர குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *