2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்து வருகிறார்.  முன்னதாக அவர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். தொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எம்.பி.க்களுக்கு வழங்குவதற்காக பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *