தலைவர் 168-ல் நான்காவது நடிகை: ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா!!!

சென்னை, ஜனவரி-31

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் இருவரின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சிவா எழுதியும் இயக்கியும் வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இமான் முதன்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தற்போது வெளிவந்த அறிவிப்பின் படி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தலைவர்-168 படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ரஜினிகாந்துடன் நயன்தாரா இணையும் நான்காவது படமாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தலைவர் 168-ல் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில் தற்போது நான்காவது நடிகையாக நயன்தாராவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *