பள்ளி மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்: டெல்லியில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!!!

டெல்லி, ஜனவரி-31

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஹர்ஷவர்தன், மனோஜ் திவாரி, பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். பின்னர் அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து நிதின் கட்கரி விளக்கினார்.

  • டெல்லி-மீரட் இடையே 16 வழிச்சாலை வரும் ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்படும். ரூ.8000 கோடியில் 90 கி.மீ.க்கு சாலை அமைக்கப்படும்.
  • டெல்லி-மும்பை இடையே உலகின் பெரிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. ரூ.3, 000 கோடி முதலீட்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட உள்ள இந்த சாலையால் மக்கள் டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் பயணிக்க முடியும்.
  • தேசிய தலைநகரின் வளர்ச்சிக்காக புல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
  • அனைத்து குடும்பத்திற்கும் சுத்தமான குடிநீர், ஏழைகளுக்கு நல்ல தரமான மாவு கிலோ ரூ.2-க்கு வழங்கப்படும்.
  • 10 புதிய கல்லூரிகள், பேட்டி பச்சோ, பேட்டி பதோ திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் வழங்கப்படும்.
  • பிறந்த குழந்தைக்கு வங்கி கணக்கு வழங்கப்படும்
  • டெல்லியின் காற்று மற்றும் தண்ணீர் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *