நியூ.க்கு எதிரான 4-வது டி-20 போட்டி: மீண்டும் சூப்பர் ஓவரில் இந்தியா திரில் வெற்றி!!!

வெலிங்டன், ஜனவரி-31

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் அதிரடியாக வெற்றி பெற்றது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே அரைசதம் அடித்தார். ராகுல் 39 ரன்களும், கேப்டன் விராட் கோலி 11 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் பென்னட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கோலின் முன்ரோ 64 ரன்களும், டிம் சைபெர்ட் 57 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் தகூர் 2 விக்கெட்டும், சாகல் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்து நியூசிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தது. பின்னர் 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் கேஎல் ராகுலும் மற்றும் விராட் கோலியும் களம் இறங்கினர்.

கேஎல் ராகுல் 10 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி 4-வது பந்தில் 2 ரன்களும், 5-வது பந்தில் பவுண்டிரியும் அடித்தார். இந்த சூப்பர் ஓவர் மூலம் இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *