உள்ளாட்சிகளில் அதிமுகவுடன் கைகோர்க்க கூடாது-திமுகவினருக்கு ஸ்டாலின் கண்டிப்பு

திருச்சி, ஜனவரி-31

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியால் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், அதிகார துஷ்பிரயோகத்தை சந்தித்து திமுக வெற்றி பெற்றது. மாநில தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை கழகமாக செயல்பட்டது. திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் வெற்றி கிடைத்துள்ளதாகவும், நல்ல திட்டங்களை நிறைவேற்ற திமுக மட்டுமே பொருத்தமானது என்று மக்கள் நம்புவதாக ஸ்டாலின் தெரிவித்தார். 

உள்ளாட்சிகளில் திமுக பிரதிநிதிகள் அதிமுகவுடன் கைகோர்க்க கூடாது. திமுகவுக்கும், வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கும் எப்போதும் விசுவாசமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *