விவசாய நிலத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி, ஜனவரி-31

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்து பல நாட்களாக ஆட்டம் காட்டி வந்த பாம்பை தீயணைப்புத்துறை பத்திரமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி. இவரது 4 ஏக்கர் விசாய நிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த கண்மணி பாம்பை கண்டு அலறி அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து காண்பித்துள்ளார். பாறையின் உள்ளே புகுந்த பாம்பு தினமும் மதிய வேலையில் மட்டும் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக ஆட்டம் காண்பித்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரி பாலசுந்தரம் தலைமையிலான 8 பேர்கொண்ட குழு ஜேசிபி இயந்திர உதவி உடன் மண் மற்றும் பாறைகளை அகற்றி சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஒன்னகறை காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர். பாம்பை லாவகமாக அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறையினருக்கு அந்த பகுதி  மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *