நெல்லை அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி ‘வார்டு’

நெல்லை, ஜனவரி-31

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி ‘வார்டு’ அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பலர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்கவும், பரவாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதேபோல தமிழக சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள், நவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இதேபோல துறைமுகங்களிலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில் நெல்லையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரத்யேக ‘வார்டு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்டில் அறை ஒன்றுக்கு 12-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உபகரணங்களும் இந்த பிரத்யேக வார்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கும் தனியாக அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *