2020-21ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும்-பொருளாதார ஆய்வறிக்கை

டெல்லி, ஜனவரி-31

தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் பொருளாதார ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளனர். இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் பொருளாதாரம் மற்றும் சந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

  1. உலக அளவில் பொருளாதார பாதிப்புகளால் இந்தியாவின் வளர்ச்சியிலும் எதிரொலித்துள்ளது.
  2. முதலீடுகள் வேகமாக வந்து சேராததால் தொழில்துறை மந்தம் காணப்படுகிறது.
  3. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2020- 21-வது நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும்.
  4. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும். இது முந்தைய கணிப்பான 7 சதவீதத்தை விட குறைவாகும்.
  5. புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.
  6. அதுபோலவே சொத்துக்கள் பதிவு செய்வது, வரி செலுத்துவது, ஒப்பந்தம் போன்றவைகளின் நடைமுறைகளையும் எளிதாக்க வேண்டும்.
  7. வெங்காயம் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை பயனளிக்கவில்லை.
  8. உள்கட்டமைப்பு துறையில், தனியார் உதவியுடன் அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.
  9. வரும் நிதியாண்டில் வரி வருவாய கணக்கிடப்பட்ட தொகையை விட குறைவாகவே இருக்கும்.
  10. அதிகரித்தால் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பதற்கு வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *