மக்களுக்கு சேவை செய்ய மீண்டு வருவேன்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை, ஜனவரி-31

மக்களுக்கு சேவை செய்ய மீண்டு வருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் 2019 உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா விஜயகாந்த் திருமண நாள் விழாவும் இன்று கொண்டாடப்பட்டது இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரேமலதா இருவரும் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.

மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: 1990-ல் ஜனவரி 31 எங்களது திருமணம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் விஜயகாந்த் நடத்துவார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கூட்டணி என்பதால் எங்களை குட்ட நினைக்க வேண்டாம் நாங்கள் குட்டு வாங்கும் ஜாதி இல்லை. குட்ட குட்ட குனிய மாட்டோம். 2021-ல் தேமுதிக வெற்றி அடையும் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைக்க செயல்படுவோம்.

கூட்டணி இருப்பது அல்லது தனித்து போட்டியிடுவது என்பது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் விரைவில் தெரிவிப்பார். துளசி வாசம் மாறினால் மாறும் தவசி வார்த்தை மாறாது என்று பிரேமலதா விஜயகாந்த் மேடையில் பேசினார்.

தொடர்ந்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்வதற்காக மீண்டும் வருவேன். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *