பொருளாதார பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்தப்படும்-மோடி

டெல்லி, ஜனவரி-31

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருளாதார பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி 11-ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் பட்ஜெட் தாக்கல், 2ம் கட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம், மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றம் என பல்வேறு அலுவல்கள் நடக்க உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியமாக பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும். இரு அவைகளிலும் பொருளாதாரம் குறித்த பரந்த தரமான கலந்துரையாடல் நடக்கவேண்டும் என விரும்புகிறேன். சுரண்டலுக்கு ஆளாகும் தலித்துகள், பெண்களின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து பா.ஜ.க. அரசு பாடுபடும். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *