நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது

டெல்லி, ஜனவரி-31

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ல் மாற்றம் செய்தது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி 11-ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் பட்ஜெட் தாக்கல், 2ம் கட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம், மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றம் என பல்வேறு அலுவல்கள் நடக்க உள்ளன.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வரும் புகைப்படம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *