வன்முறைகளை மத்திய அரசு சகித்துக் கொள்ளாது-அமித்ஷா

டெல்லி, ஜனவரி-30

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தினார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் உத்தர பிரதேசத்தின் ஜீவார் பகுதியை சேர்ந்த ராம்பக்த கோபால் (வயது 19) என தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா: ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டெல்லி கமிஷ்னரிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதுபோன்ற வன்முறைகளை மத்திய அரசு ஒருபோதும் சகித்து கொள்ளாது என்றும் கூறியுள்ளார். மேலும், இது ஒரு சீரியஸான விஷயம், குற்றவாளிகள் என்றைக்கும் தப்பிக்க முடியாது என அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *