மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கிய தனுஷ்…3-வது இந்தி படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்!!!

சென்னை, ஜனவரி-30

நடிகர் தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

Atrangi Re என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் நடிக்கிறார். மேலும், பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவான அக்‌ஷய் குமாரும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடைத்தை பிடித்துள்ள தனுஷ் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ரான்ஜனா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரான்ஜனா படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு பால்கி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சனுடன் இணைந்து ஷமிதாப் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் தனுஷுக்கு பெரிய வெற்றியை தேடித்தரவில்லை.

இதையடுத்து தனது மூன்றாவது படத்திற்கு இந்தியில் முதல் வெற்றியை பெற்று தந்த ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் மீண்டும் தனுஷ் இணைந்துள்ளார். இந்த படத்தில் சாரா அலிகான் கதாநாயகியாகவும், அக்‌ஷய்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *