முரசொலி வாடகை கட்டடத்தில் இயங்குகிறதாமே…! ஸ்டாலின் அரசியலிருந்து விலகுவாரா ?.. ராமதாஸ்

சென்னை.ஜனவரி.30

முரசொலி வாடகை கட்டடத்தில் இயங்குகிறது என்றால் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலிருந்து விலகுவரா என பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தனது டவிட்டர் பக்கத்தில்,பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமுகத்தை சாடும், சாதிவன்மத்தை கேள்வி கேட்கும துணிச்சல் காரன் என்று பராட்டி பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி  நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார்  என்று நம்புவோம்! என பதிவிட்டிருந்தார்.


இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டில்,  முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டவிட இல்லை என்றார். இதனைத் தொடர்ந்து ராமதாஸ்,ஸ்டாலின் இருவரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த விவகாரம் குறித்து டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில்,

“முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே…. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா”

அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி… முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?

அகில இந்தியாவில் மட்டுமல்ல…. ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி…. நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது! என்றவாறு ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *