மறைமுக தேர்தல்: 8 ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக கூட்டணி!!!

சென்னை, ஜனவரி-30

இன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக 26 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி உள்ளிட்ட 335 பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8 இடங்களை அதிமுகவும், 4 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியக்குழு தலைவராக பா.ம.க. வேட்பாளர் செல்வி ஆடியபாதம் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்துக்கண்ணு 9 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *