தொண்டாமுத்தூர், மதுக்கரை சார் பதிவாளர் அலுவலகம்: முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

கோவை, ஜனவரி-30

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மதுக்கரையில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக கலந்துகொண்டார். மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *