டெல்லி ஜாமியா பல்கலை. யில் துப்பாக்கிச்சூடு!!!

டெல்லி, ஜனவரி-30

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

‘உங்களுக்கான சுதந்திரத்தை வாங்கி கொள்ளுங்கள்’ என பொருள்படும் ‘யேஹ் லோ ஆசாதி’ என்று கத்திக்கொண்டே அந்த நபர் மாணவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழகம் அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *