மோடிக்கும், கோட்சேவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை-ராகுல் காந்தி

வயநாடு, ஜனவரி-30

மோடியின் கொள்கைக்கும், கோட்சேவின் கொள்கைக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கல்பேட்டா பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். ‘Save the Constitution’ என்ற தலைப்பில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேரணியை தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், நாதுராம் கோட்சே மற்றும் நரேந்திர மோடி இருவரும் ஒரே மாதிரியாக கொள்கை கொண்டவர்கள். கோட்சேவின் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என சொல்லிக் கொள்ளும் தைரியம் மோடிக்கு இல்லை. அது ஒன்றை தவிர மோடிக்கும், கோட்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நான் இந்தியனா இல்லையா என்பதை முடிவு செய்ய நரேந்திர மோடி யார்? யார் இந்தியன், யார் இந்தியன் இல்லை என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? நான் இந்தியன் என்பது எனக்கு தெரியும். அதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.

கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார். ஏனெனில் காந்தியின் கொள்கைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. அவர் யாரையும் நேசிக்கவில்லை. யாரை பற்றியும் அக்கறை கொள்ளவோ, நம்பிக்கை வைக்கவோயில்லை. அதே போல் தான் நமது பிரதமரும். அவர் தன்னை மட்டுமே நேசிப்பவர். தன்னை மட்டுமே நம்புபவர். இவ்வாறு ராகுல் காந்தி பேசி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *