மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

டெல்லி, ஜனவரி-30

மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக மகாத்மா காந்தி ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை’ என அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவரது பிறந்த நாள் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு நாளான இன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்  மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *