நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: தொடரை கைப்பற்றி இந்தியா அபார வெற்றி

ஹாமில்டன், ஜனவரி-29

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்தியா தொடரையும் கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர். 

ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.  அதை தொடர்ந்து, ஷிரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அவுட்டாகினர்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது.  நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்தனர்.  நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.  இதனால் போட்டியானது சமனில் முடிந்தது.  நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.  இந்தியா தரப்பில் பும்ரா வீசிய ஓவரில் நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.  நியூசிலாந்து தரப்பில் சவுதி வீசிய ஓவரில் இந்தியா 20 ரன்கள் எடுத்தது.  சூப்பர் ஓவரில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் 5 தொடர்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *