வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பொறுப்பேற்பு

டெல்லி, ஜனவரி-29

இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த விஜய் கேசவ் கோகலேவின் பணிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, வெளியுறவுத் துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்னதாக இவர், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக செயல்பட்டு வந்தார்.

பதவியேற்ற பின் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா செய்தியாளர்களிடம் பேசியபோது: 36 ஆண்டுகளுக்கு முன்பு இளம் தொழில்முறை நிபுணராக இந்த தளத்திற்குள் நான் இருந்ததை போல, இப்பொழுதும் உணர்கிறேன். தேசத்தைதட்டி எழுப்புவதில் அமைச்சகத்திற்கு உள்ள பங்கை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *