Man vs Wild நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி, நல்ல அனுபவம்-ரஜினிகாந்த்

சென்னை, ஜனவரி-29

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பந்த்ப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடா்ந்து சென்னைக்கு திரும்பிய நடிகா் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஸ்கவரி சேனலின் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தாா்கள்.

அதனுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பண்டிப்பூர் காட்டுக்கு சென்றிருந்தேன். அதில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பெரிய காயம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அங்கே புதா்கள் நிறைய இருந்தன. அதில் இருந்த முள்கள் ஒரு சில இடங்களில் குத்தியது, அவ்வளவுதான் என்றாா்.

படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பியர் கிரில்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரஜினிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *