தமிழகத்திலே உயரமாக கோவையில் ரூ.75 கோடியில் 2ம் அடுக்கு மேம்பாலம்: காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கோவை.ஜனவரி.29

கோவை காந்திபுரத்தில் ரூ.75 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டாம் அடக்கு  மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

காந்திபுரத்தில் 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரை அமைக்கப்பட்ட இரண்டாவது மேம்பால பணிகள் நிறைவடைந்ததை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சிவாயிலாக  திறந்து வைத்தார். கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் கலந்து கொண்டார்.

பின்னர் புதிய மேம்பாலத்தில் போக்கு வரத்து சேவையை அமைச்ச்ர எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 மேம்பாலம் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டதை அடுத்து கோவை மக்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *