பாஜக.வில் சேர்ந்தார் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார். 

டெல்லி.ஜனவரி.29

புகழ்பெற்ற பாட்மிண்டன் வீராங்களை சாய்னா நேவால் ஹரியானாவில் பிறந்தவராவார்.  தற்போது ஹைதராபாத்தில் வசித்து சாய்னா இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங்கை சந்தித்து சாய்னா, பாஜகவில் இணைந்தார். வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வரும் 29 வயதான சாய்னா தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சாய்னாவுடன் அவரின் மூத்த சகோதரியுமான சந்திரன்ஷுவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (2015) மற்றும் வெண்கலம் (2017), இரண்டு முறை காமன்வெல்த்தில் தங்கம் என ஏராளமாக பதக்கங்களை குவித்துள்ளவர் சாய்னா நேவால்.

தனது பேட்மிண்டன் வாழ்வில் அதிகபட்சமாக 2015ல் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உயர்ந்தவர் சாய்னா நேவால். பிரகாஷ் படுகோனேவிற்கு பிறகு உலகின் முதல் நிலை வீரராக சாதனை படைத்தவர் சாய்னா மட்டுமே.

இந்தியாவின் 2வது உயரிய பத்ம பூஷண் விருதினை 2016ல் பெற்றவர் சாய்னா. மேலும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளையும் சாய்னா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *