எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் புதிய தீயணைப்பு நிலையம்: காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கோவை.ஜனவரி.29

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில்  புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணிகள் நிலையத்தை  முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்.

தொண்டாமுத்தூரில் மக்களின்  கோரிக்கையை ஏற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் முயற்சியால்  தீயணைப்பு மற்றும் மீட்புகள் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில்  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி  காணொலி காட்சி மூலம் தொண்டாமுத்தூர்  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை துவக்கி வைத்தார் .

காணொளி நேரடி நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *