புதிதாக 240 அரசுப் பேருந்துகள் : முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை.ஜனவரி.29

  ரூ.84 கோடி செலவில் புதியதாக 240 பேருந்துகளின் போக்குவரத்து சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.600 மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் 240 புதிய பேருந்துகள்  வாங்கப்பட்டன . புதிய பேருந்துகளின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகளில் 37 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும். இவை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 103 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருச்சி மற்றும் தஞ்சை ஊரை மையமாக கொண்டு இயங்கக்கூடிய வகையில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமுனை சேவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *