சிஏஏ.,வுக்கு எதிராக போராடினால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எச்.ராஜா

கடலூர்.ஜனவரி.29

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுவோரை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என   பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.


கடலுாரில்  நடந்த, குடியுரிமை திருத்த சட்ட விளக்கக் கூட்டத்தில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் எச்.ராஜா, குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் துளியளவு கூடப் பாதிப்பு ஏற்படாது. இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி, தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட, யாருக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று கூறினார்.


தேவையற்ற, அவசியமற்ற போராட்டத்தை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவோரை இரும்புக் கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என்று எச்.ராஜா தெரிவித்தார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு தலித் தலைவர் அல்ல என்றும் ஆன்டி தலித் தலைவர் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *