சென்னை மாநகராட்சிக்கு அதிநவீன மீட்பு உபகரணங்கள்: அமைச்சர் S.P.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை, ஜனவரி-28

சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் அதிநவீன இயந்திரம் மற்றும் வாகனங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் கீழே விழும் மரக்கிளைகள் மின்கம்பங்கள் போன்றவற்றை அகற்றி சீர் செய்ய, 11 மீ உயர கட்டடத்தில் சிக்கியுள்ள மனிதர்களை மீட்கும் ரூ.39.50 லட்சம் மதிப்பிலான டெலிஹாண்ட்லர் உபகரணம் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

மழைநீர் வடிகால்களில் உள்ள சேறு சகதிகளை அகற்றி சுத்தம் செய்யும் வகையில் 6 ரீசைக்லர் வசதியுடன் கூடிய சக்‌ஷன் கம் ஜெட்டிங் வாகனங்கள் ரூ.32 கோடி முதலீட்டிலும், ரூ.5.20 கோடி முதலீட்டில் ஒரு வாகனமும் என மொத்தம் 7 வாகனங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வசிக்கும் வீடற்றோரை மீட்டு காப்பகங்களில் தங்க வைக்க அழைத்து செல்லும் குளிர்சாதன வசதியுடன் கூடிய மூன்று மீட்பு வாகனங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்று வாகனங்களையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *