ஓசூரிலிருந்து காதலர் தினத்திற்கு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி

ஓசூர், ஜனவரி-28

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் சீரான சீதோஷன நிலை நிலவுவதால் திறந்தவெளியிலும், பசுமைக்குடில்களிலும் பல ஆயிரம் ஹெக்டர்களில் ரோஜா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

ஒசூரில் இருந்து ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புனிதவெள்ளி, காதலர் தினங்களில் அதிக அளவிலான மலர்கள் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு காதலர் தினத்திற்காக சீனாவிலிருந்து அதிகஅளவில் பிளாஷ்டிக் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக சீனா பூக்களின் ஏற்றுமதி குறைந்து. இந்த நிலையில், இந்தாண்டு ஒசூரில் இருந்து காதலர் தினத்திற்காக வெளிநாடுகளுக்கு 2 கோடி மலர்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வரை உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா மலர் 10 ரூபாய்க்கும், ஏற்றுமதி 15 ரூபாயுமாக இருந்து வருகிறது, இந்தாண்டு ரோஜா மலரின் உற்பத்தி குறைந்திருப்பதாலும், காதலர் தினத்திற்காக இன்னும் 15 நாட்கள் உள்ளதாலும் ரோஜா மலரின் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

தமிழக அரசு அண்மையில் ஒசூரில் 21 கோடி ரூபாயில் சர்வதேச மலர்கள் ஏல மையம் அமைய முதல்வர் அறிவிப்பு செய்துள்ளதற்காக ஒசூர் பகுதி மலர் விவசாயிகள் நன்றியை தெரிவித்துக்கொண்டதுன் விரைவில் பணிகளை தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *