இணையத்தில் லீக் ஆனது மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட்-படக்குழு அதிர்ச்சி

சென்னை, ஜனவரி-28

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில், நடிகர் விஜய்யும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரியளவில் ட்ரெண்டாகவும், விமர்சனத்துக்கும் ஆளானது.

இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து கசிந்த நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அதன்படி டைட்டில் சாங்கையும், உடம்பு புல்லா திமிரு என்ற பாடலையும் அனிருத் பாடியுள்ளார். வா, வா என் எதிரில் என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இங்க நான் பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தளபதி கோட்டையில் பாடலை அந்தோனி தாஸும், நான் வந்தா பட்டாசு வெடிக்கும் பாடலை நாகேஷ் அஸிசும் பாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *