விஷால் – அனிஷா திருமணம் நிறுத்தம்?

நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஆக-24

நடிகர் விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்தார் விஷால். கட்டிடப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் அக்டோபர் மாதம் விஷால், அனிஷா திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.

இதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *