CAA-க்கு எதிராக போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு நிதியுதவி

டெல்லி, ஜனவரி-28

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனாலும், சட்டம் இயற்றியதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம் மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுவதற்காக கேரளாவை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சில தனிநபர் வங்கி கணக்குகளில் 120 கோடி ரூபாய் பணம் வரை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 1 கோடியை 4 லட்சம் ரூபாய் 73 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு 2000 ரூபாய் முதல் 5000 வரை தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதி உதவி என்ற குற்றச்சாட்டு போலியானது, ஆதாரமற்றது என பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *