சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீமின் அடுத்த படம் ”ஏலே”

சென்னை, ஜனவரி-27

சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குநரான ஹலிதா ஷமீம் தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. 4 வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது. காதல் என்ற ஒற்றை வார்த்தை ஒவ்வொரு மனிதர்களுக்குள் எவ்வாறு வேறுபடுகிறது, அதன் சுவாரஸியங்களை அழகாக படமாக்கியிருந்தார் ஹலிதா ஷமீம். ஏற்கனவே ஹலிதாவின் இயக்கத்தில் வெளியான பூவரசம் பீப்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், சில்லுக்கருப்பட்டி மூலம் கவனிக்கத்தக்க இயக்குநரானார்.

சில்லுக்கருப்பட்டி படத்திற்கு பிறகு, ஹலிதாவின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படம் ஏலே என்றும், விரைவில் தயாராக இருப்பதாகவும் வெளியிட்டுள்ளார்.

ஓட்டு வீடு, சைக்கிள், ஐஸ், பம்பரம் என கிராமத்து நினைவுகளை ஞபாகப்படுத்தும் ஏலே படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும், சில்லுக்கருப்பட்டி போன்று நல்ல, யதார்த்த சினிமாவை ஹலிதா ஷமீம் கொடுப்பார் என்பதில் எந்தவித ஐயமில்லை.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *