டெல்லியை உலகத்தர நகரமாக மாற்றாவிட்டால் என காதை பிடித்து கேள்வி கேளுங்கள்-அமித்ஷா

டெல்லி, ஜனவரி-27

டெல்லியை உலகத்தர நகரமாக மாற்றுவோம் எனவும், அதை செய்யாவிட்டால் தன் காதை பிடித்து கேள்வி கேளுங்கள் என்று டெல்லி மக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி.8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாபர்பூர் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: டெல்லியை காங்கிரஸ் 15 ஆண்டுகளும், ஆம்ஆத்மி 5 ஆண்டுகளும் ஆட்சி செய்தன. நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் டெல்லியை உலகத்தர நகரமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறேன். அதுநடக்கவில்லை எனில், நீங்கள் வந்து என் காதை பிடித்து கேள்வி கேளுங்கள்.

நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் சுத்தமான நீர், சாலை வசதிகள், மின்சார வசதிகள் என ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொன்றில் முதலிடத்தில் உள்ளன. ஆனால் கெஜ்ரிவாலின் அரசு, பொய்யர்களின் பட்டியலில் மட்டுமே முதலிடத்தை பிடித்துள்ளது. பொய்யான வாக்குறுதிகள் அளிப்பது பற்றி ஆய்வு நடத்தினால் இந்த அரசு முன்னணியில் இருக்கும்.

தேசத்தை பிளவுப்படுத்த நினைக்கும் சிறு சிறு கும்பலை சேர்ந்தவர்களை ஓட்டுவங்கிக்காக கெஜ்ரிவால், காங்கிரசின் ராகுல் ஆகியோர் காப்பாற்ற நினைக்கின்றனர். டெல்லியில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரு அறை கொண்ட வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *