கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜனவரி-27

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள கலாபசாஸ் மலைப்பகுதியில், தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விழுந்த சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. இவ்விபத்தில் பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் மற்றும் அவரது மகள் உட்பட 9 பேர் பலியாயினர்.  கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *