காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின்

சென்னை, ஜனவரி-27

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைத்துள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அப்போது அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா,  உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் இதில் தப்பவில்லை.

இதற்கிடையே, பனி மூடிய பின்னணியில் நீண்ட தாடியையும் கம்பளித் தொப்பி அணிந்தபடி இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அது பெரும் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பல மாதங்களாக வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா பகிந்துள்ள புகைப்படம் வருத்தமளிக்கிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பாரூக் அப்துல்லா மற்றும் பிற அரசியல் தலைவர்கள் விசாரணை அல்லது உரிய செயல்முறை இல்லாமல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை மத்திய அரசு உடனே விடுவித்து பள்ளத்தாக்கில் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் உள்ள புகைப்படமும், இயல்பாக அவர் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *