கே.சி.பழனிச்சாமிக்கு பிப்.7-ம் தேதிவரை நீதிமன்ற காவல்

கோவை, ஜனவரி-25

கோவையில் கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை பிப்ரவரி 7-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் கே.சி.பழனிசாமி அவரது இணையதளம் மற்றும் லெட்டர் பேடில் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் அளித்த புகாரின்பேரில் இன்று காலை போலீசார் கே.சி.பழனிசாமியை கைது செய்தனர்.

அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 10 மணி நேர விசாரணைக்கு பிறகு கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *