அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

வூகான், ஜனவரி-24

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்ம காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்த காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீத தன்மையைகொண்ட அந்த வைரஸ் ‘கொரோனா’ வகையை சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றி கொண்டு இன்னும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது, 800-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சீனாவில் 5 முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்ததோடு, 13 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்டவை செயல்படாமல் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *