டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு: 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை, ஜனவரி-24

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 3 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பான விசாரணையில், 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் எப்போதுமே டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுது முடியாத வகையில் வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களின் அதிகாரிகள் உட்பட 12 பேரிடம் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர்.

எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *