நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் யார்? வெற்றிமாறனா? சமுத்திரக்கனியா?

சென்னை, ஜனவரி-24

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து, தனது அடுத்த படத்திற்கு நடிகர் விஜய் இயக்குநர்களை சந்தித்து கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என செய்திகள் வந்தது. அதை அடுத்து, விஜய்யை இயக்கப்போகும் இயக்குநர்களின் பட்டியலில் நாடோடிகள் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார்.

நடிகர் சமுத்திரகனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் பல இயக்குநர்களை சந்தித்து கதை கேட்டு வருகிறார். ஆனால், எந்த இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிக்கவிக்கப்படவில்லை. இயக்குநர் சமுத்ரகனியோடு சேர்த்து மகிழ் திருமேனி, வெற்றிமாறன், பேரரசு, மோகன் ராஜா உள்ளிட்ட இயக்குநர்களும் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *