இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு – திமுக சமாதானத்தால் சண்டையை மறந்த வைகோ

சென்னை, செப்-23

காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியது பெரிய சர்ச்சையானது. இதனால், கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர்களுக்கும் மதிமுக எம்பி வைகோவிற்கும் இடையில் சண்டை வந்தது. வைகோ தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார். இதனால் வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் விமர்சனம் செய்தனர்.

இந்த பிரச்சனைக்கு முடிந்து சில நாட்கள் கழித்து, தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன.

இந்த நிலையில் எப்போதும் போல திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறுமா என்று கேள்வி எழுந்தது. காங்கிரஸ் உடன் சண்டை ஏற்பட்ட நிலையில், திமுக உடன் மதிமுக தொடர்ந்து தேர்தலில் நீடிக்குமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று மதிமுக தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலில் இரண்டு கட்சியின் வெற்றிக்காக மதிமுக பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்காக மதிமுக கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும். புதுச்சேரியில் நடக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நாம் வாக்கு சேகரிக்க வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக சார்பில் வைகோவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடந்ததுதான் வைகோவின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *