நியூசிலாந்துக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா அபார வெற்றி!!!

ஆக்லாந்து, ஜனவரி-24

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டியின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கனே வில்லியம்ஸ் 51, ராஸ் டெய்லல் 54 கோலின் முன்ரோ 59 ரன்கள் எடுத்தனர்.

இந்திய தரப்பில் ஜடேஜா, பும்ரா, ஷிவம் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 19 ஓவரில் 204 ரன்கள் எடுத்து 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயர் அய்யர், 58 ரன்களும் ராகுல் 56 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். கேப்டன் விராட்கோலி 45 ரன்கள் எடுத்தார். இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 5-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *