ஆபாச கருத்துக்களை பதிவிடுபவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவு!!!

சென்னை, ஜனவரி-24

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளை பதிவு செய்பவர்களின் பட்டியலை தமிழகம் முழுவதும் சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் நீதிபதிக்கு எதிராக கருத்து பதிவிட்டு கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதி, இதுபோல் அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்ன மாதிரியான நடைமுறை வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துகளை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் ஜன.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *