சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ”மன்னவன்” அண்ணாத?

சென்னை, ஜனவரி-24

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168-க்கு மன்னவன் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, நடிகர் ரஜினி இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லொக்கேஷன் பார்த்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது தலைவர் 168 என்று குறிப்பிடப்படும் படத்திற்கான தலைப்பினை படக்குழு ஆலோசனை செய்து வருகிறது. இந்த படத்திற்கு  ”மன்னவன், அண்ணாத” ஆகிய இரண்டு பெயர்களையும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி இன்னும் படத்தின் தலைப்பை இறுதி செய்யவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *